ஜெர்மனியில் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்

ஜெர்மனியில் குடியுரிமைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொள்ள கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஜெர்மன் அரசாங்கமானது பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் அமைச்சர் நான்சி இந்த விடயம் தொடர்பாக சில வல்லுனர்களுடன் ஆலோசனைகளை நடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற அகதிகளை 3வது நாடுகளுக்கு அனுப்பி இந்த நாட்டில் வைத்து அகதி விண்ணப்பங்களை பரிசீலணை செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரித்தானியாவானது ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளை அனுப்பி அவர்களுடைய அகதி விண்ணப்பத்தை விசாரிப்பதற்கு எண்ணி இருந்த நிலையில் பிரித்தானியாவின் உச்ச நீதிமன்றமானது இந்த விடயம்பிரித்தானியாவின் அடிப்படை சட்டத்துக்கு விரோதமான முறையில் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.