இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டாம்:அனைத்துலக நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த அமெரிக்கா.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு கோரவேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் றிச்சார்ட் விசேக் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றத்தை கடந்த புதன்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.ஒரு தலைப்பட்சமான இந்த நடவடிக்கை போரை முடிவுக்கு கொண்டுவராது.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு இந்த பகுதிகளில் இஸ்ரேலியர்கள் நிலைகொண்டிருக்க வேண்டும் என 15 நீதிபதிகள் கொண்ட சபையில் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், கடந்த ஒக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கான 2 மில்லியன் மக்களுக்கும் கூட்டாக தண்டனை வழங்க முடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களுக்கு எதிராக மோசமான வன்முறைகளை இஸ்ரேல் மேற்கொள்வதை விடுத்து அவர்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என ரஸ்யாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரையில் 29, 000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 70,000 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 60 விகிதமானவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.