நேட்டோ அணியில் 32 வது நாடாக இணைய காத்திருக்கும் சுவீடன்,
நேட்டோ அணியில் சுவீடன் இணைவதற்கான ஒப்புதலை ஹங்கேரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர் கூட்டமைப்பின் நாடுகளின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் ஹெ்ங்கேரிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் புதிய பாதுகாப்பு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டிருந்தார்.
இந்த நிலையில் ஹங்கேரி நாடாளுமன்றத்தில் சுமூகமான வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரஷ்யா 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது வலிந்து போர் தொடுத்திருந்த நிலையில் சுவீடன் தனது தேசிய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அணிசேரா கொள்கையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
கடந்த வருடம் பின்லாந்தினையடுத்து சுவீடன், நேட்டோ அணியில் 32 வது நாடாக இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. துருக்கி மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் சுவீடன் நேட்டோவில் இணைந்து கொள்வதற்கு காத்திருந்தது.சுவீடன் தனது ஆயுத விற்பனை குறித்தான சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்து துருக்கியினை சமாதானப்படுத்தியிருந்த நிலையில்இ ஹங்கேரியின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளது.