வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா.
இலங்கை, இந்திய பக்தர்கள் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன.
வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் .இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை . இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சில இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையினால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்முறை திருவிழாவில் கலந்துகொள்வதில்லை என தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
எனினும், திருவிழாவில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான இந்திய மக்கள் இன்று வருகை தர முயற்சி செய்த போதும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.