ரிஷி சுனக் கூறிய ஒரு கருத்துதான் தேர்தலில் அவரது பின்னடைவுக்குக் காரணம்
பிரித்தானிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் கூறிய ஒரு கருத்துதான் தேர்தலில் அவரது பின்னடைவுக்குக் காரணம் என அவரது அணியினர் கருதுகிறார்கள்.பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யும் நிலை உருவானதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.அடுத்த பிரதமருக்கான போட்டியில் பலர் களமிறங்கிய நிலையில், வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமென கருதப்பட்டவர்களில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்கும் ஒருவர். அதே நேரத்தில், தங்களால் ஆளப்பட்ட ஒரு நாட்டின் பின்னணி கொண்டவரை, பிரித்தானியர்கள் தங்களை ஆள்பவராக தேர்ந்தெடுக்கப்போகிறார்களா என்ற ஆச்சரியமும் ஏற்பட்டது.
ஆனால், போட்டியில் வேகமாக முன்னேறி, பிரதமருக்கான போட்டியில் இருவரில் ஒருவராக ரிஷி நின்றபோது, திடீரென அவருக்கு பின்னடைவு ஏற்படத்துவங்கியது.அதற்கு பல்வேறு காரணங்கள் தொடர்ந்து கூறப்பட்டுவருகின்றன.இந்நிலையி
அப்போது அவர், அந்த காலகட்டம் மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், தன்னை வலிமைப்படுத்துவதாகவும் இருந்ததாகவும், ஒரு இளைஞனாக இருந்திருந்தால், அமெரிக்காவுக்குச் சென்று அதேபோல் ஒரு விடயத்தைத்தான் செய்ய விரும்புவேன் என்றும் பதிலளித்துள்ளார்.10 நிமிடங்களில் கலிபோர்னியாவைக் குறித்து மூன்று முறை உற்சாகமாக பேசியுள்ளார் ரிஷி. அது கன்சர்வேட்டிவ் கட்சியினர் பலருக்குப் பிடிக்கவில்லை என ரிஷியின் அணியினர் கருதுகிறார்கள்.ரிஷி கலிபோர்னியாவைக் குறித்து திரும்பத் திரும்ப பேசும்போதே, அவர் வெற்றிபெறப்போவதில்லை என அவரது அணியினர் எண்ணத்துவங்கிவிட்டார்களாம்.