சவாலை ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மாத்திரமே இருக்கின்றார்:  பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க போவதாகவும் அவரை ஆதரிக்க வேண்டியது பொதுஜன பெரமுன உட்பட நாட்டை நேசிக்கும் அனைவரதும் கடமை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நேற்று கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரசன்ன இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றுமாரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. வேலை செய்த, மக்கள் நம்பிக்கை வைத்துள்ள,  சவாலை ஏற்றுக்கொண்ட,பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்த தலைவரிடம் நாட்டை ஒப்படைப்பது சிறந்தது என்பது எனது நிலைப்பாடு.

சவாலை ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மாத்திரமே இருக்கின்றார்.சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போது நாட்டை பற்றி சிந்தித்தே முடிவுகளை எடுத்தது. இதனால், எமது கட்சி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறேன். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித தயார்நிலையிலும் அரசாங்கம் இல்லை. தேர்தலுக்கு தேவையான நிதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.