முல்லைத்தீவு கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கௌரவிப்பு விழா
முல்லைத்தீவு கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த சாதாரண தர பரீட்சையிலும் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது பெபரவரி 3ம் திகதி அன்று பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நகழ்விற்கு வருகை தந்த அனைவரும் பாடசாலை பாண்ட் இசை வாத்திய அணியினரால் மரியாதை செலுத்தி அழைத்து வரப்பட்டனர். விருந்தினரர்களாக கலந்து கொண்டவர்கள் மங்கள விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைக்க தரம் 05 மாணர்கள் வரவேற்று நடத்தினால் வந்தோரை வரவேற்றார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அருட்தந்தை யு.விமலநாதன் அவர்களும் கண்ணகை அம்மன் ஆலய பிரதம குருக்கள் சிவற் கிரிஷாந் ஐயா அவர்களும் ஆசியுரை வழங்கினார்கள்.
முல்லலைத்திவு கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பாடசாலை அதிபர் திரு.பே.செந்தூரன் அவர்கள் தலைமையுரை வழங்கி , சித்தி பெற்ற மாணவர்களுக்னை வாழ்த்துரைகளைஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.இ.கணேசலிங்கம் அவர்கள் வழங்கினார். கல்வியின் தரம் உயர்த்தலில் அயராது உழைத்து , தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரிய ர்களையும் கௌரவிக்கும் நிகழ்வானது கனடாவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதன் அவர்களின் அணுசரணை யுடன் நடைபெற்றது.
இந்நத நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டவர்களில் ஒருவரான இலக்கிய கலாநிதி தமிழருவி த. சிவகுமாரன் அவர்கள் வாழத்துரை வழங்கி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தினார். அத்தோடு , இந்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் அவர்களை வழிப்படுத்தி ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர் நாடுகளில் உள்ள நல்லுள்ளங்களின் கற்கை நெறி உதவிக் குழுவின் இதற்கான அ அணுசரணையை வழங்கிருந்தது.
இந்த கௌரவிப்பு விழாவில் தரம் 10 மாணவியரரின் கவிதை அளிக்கை பாராட்டப்பெற்றது. இந்த நிகழ்வில் முல்லைத் திவு செம்மலை மகா வித்தியாலய அதிபர் திரு.செ.யோகேஸ்வரன் அவர்களின் வாழ்த்துரையும் மாணவர்களை உற்சாகப்படுத்தியது. சாதனையாளர்களை கௌரவிக்கவும் பல மாணவர்களை ஊக்குவிக்கவும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது