எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சியடைந்த அமெரிக்க பொருளாதாரம்.
அமெரிக்க பொருளாதாரம் கடந்த ஆண்டின் இறுதி காலப்பகுதியில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க பொருளாதாரம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதகாலப்பகுதியில் 3.3 வீதம் விரிவடைந்துள்ளதாக வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.
ஆய்வாளர்கள் 2 வீத அதிகரிப்பையே எதிர்பார்த்த நிலையில் இந்த அதிகரிப்பானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 1.9 வீதமாக காணப்பட்ட அமெரிக்க பொருளாதார வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் 2.5 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி கடன் வாங்கும் செலவுகளை கட்டுப்படுத்தி, பணவீக்கத்தை மேட்டுப்படுத்தியமையால் இவ்வாறு எதிர்பாராத பொருளாதார மீள்தன்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகம் சீராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் ஆரோக்கியமான தன்மையில் இருப்பதாக மக்களை நம்பவைப்பதற்கு போராடிவரும் நிலையில், இந்த தகவலானது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.