ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிடுவார் அவரே வெற்றியீட்டுவார்: ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது எதிர்க்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக ஜனாதிபதி ரணில் தேர்தலில் வெற்றியீட்டுவார் என தெரிவித்தார்.
ஜனாதிபதி இன்னும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவில்லை என்பதால், எதிர்க்கட்சிகளே வெற்றிபெறும் என்று பலர் இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்’.எதிர்க்கட்சிகள் பிளவுபட்டால், ஜனாதிபதி தானாகவே மேலே வருவார். முன்னதாக, இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய எதிர்க்கட்சியாக இருந்தது. எனினும் எதிர்க்கட்சியின் பலவீனத்தால் ஜே.வி.பி. மேலே வந்தது.சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் வாக்குகள் பிளவுபடுவதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றியீட்டுவார் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.