பிரித்தானியாவில் பரவும் நோரோவைரஸ் தொற்று.
பிரித்தானியா முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கடந்த சில வாரங்களாக நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி அறிக்கையின்படி, நவம்பர் கடைசி வாரத்தில், ஸ்காட்லாந்தில் சுமார் 1,500 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 60 வீதம் அதிகமாகும்.
இது கடந்த எட்டு வருடங்களில் மிக உயர்ந்த விகிதத்தில் பதிவாகியுள்ளதாக பப்ளிக் ஹெல்த் ஸ்காட்லாந்தின் (BHS) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதத்தில், இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் சராசரியை விட 179 வீதம் அதிகமாக இருப்பதாக கார்டியன் தெரிவித்துள்ளது.
நோரோவைரஸ் என்றால் என்ன?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, நோரோவைரஸ் என்பது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தொற்றுநோயாகும்.
நோரோவைரஸால் யார் வேண்டுமானாலும் நோய்வாய்ப்படலாம். இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது.
நோரோவைரஸின் முக்கிய அறிகுறிகள்:
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- வாந்தி
- அதிக உடல் வெப்பம்
- தலைவலி
- கை, கால் வலி
நோரோவைரஸ் தொற்று காரணமாக மிடில்ஸ்ப்ரோ வைத்தியசாலையின் நான்கு விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோரோவைரஸ் பரவல் “கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில்” வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.