வடக்கு, கிழக்கு தமிழர் தாயப்பகுதிகளை சர்வதேசத்திற்கு வாடகைக்கு விடுவதில் இலங்கை அரசு முனைப்பு.
இலங்கை அரசு தன்னை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்க வடக்கு, கிழக்கு தமிழர் தாயப்பகுதிகளை சர்வதேசத்திற்கு வாடகைக்கு விடுவதில் முனைப்பு காண்பித்து வருகின்றது என கரத்துக்ள எழுந்துள்ளன. அதன் பிரகாரம் சமுதாய மட்ட சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையொழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, கொரியக் குடியரசின் 1.65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியனுசரணையுடன் குறித்த திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது 21 தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, யாழ் தீபகற்பத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் அமெரிக்க டொலர் பங்காள நிதியனுசரணையை அரசாங்கத்துக்கு வழங்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலை மனு கோரப்பட்டுள்ளது.
மேலும், பூநகரி குளத்திலிருந்து 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.ஆயிரத்து 500 மெகாவோட் ஆற்றல் சேமிப்பு அமைப்புடனான 700 மெகாவோட் சூரிய மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் குழுமத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.