வரும் தேர்தலில் பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக் பதவியை இழப்பார்: கருத்துண்கணிப்பு
பிரிட்டிஷ் வரலாற்றில் பொதுத் தேர்தலில் பதவியில் இருக்கும் எந்தப் பிரதமரும் தங்கள் இடத்தை இழக்கவில்லை. ஆனால் பிரித்தானிய ஜனநாயக அரசியல் வரலாற்றில் பொதுத் தேர்தலில் பதவியை இழந்த முதல் பிரதமர் என்ற வரலாற்றை எதிர்வரும் தேர்லில் ரிஷி சுனக் எதிர்கொள்வார் என கடந்த வார கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
நடத்தப்பட்ட நான்கு கருத்துக் கணிப்புகளும் தொழிற்கட்சிக்கு 24 முதல் 30 புள்ளிகள் வரை முன்னிலை அளித்துள்ளதோடு டோரியின் ஆதரவு 19 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை இருந்தது என கணிப்பிடப்பட்டுள்ளது. உள்துறைச் செயலர் சுயெல்லா பிராவர்மனை பதவி நீக்கம் செய்து, தனது உயர்மட்ட அணியை மறுசீரமைப்பதன் மூலம் அரசியல் முயற்சியை மீண்டும் பெறுவார் என்று நம்பிய பிரதமருக்கு இது கடும் அடியாகும் என அவதானிகள் கூறுகின்றனர்.
இதேவேளை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக் கடிதம் கொடுத்தும் குறிப்பிடத்தக்கது.