பிரதமர் நரேந்திர மோடியுடன் 90 அதிகாரிகள் தான் இந்திய அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் , அதன் பின்னர் 22 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆதரவில் இருந்து பின்வாங்கியதால் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினர் அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மத்திய பிரதேசம் அசோக்நகர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தனது உரையில் இந்தியாவில் ஒரே ஜாதி இருக்கிறது, அது ஏழைகள் ஜாதி என்று கூறினார்.
அதே நேரம் அவர் தனது பெயரில் நரேந்திர மோடி என தன்னை ஒரு ஓபிசி பிரிவினர் என்றும் கூறுகிறார். லட்சக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் தலித், ஓபிசி, ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள். 50 வீதம் ஓபிசி பிரிவினர் இருக்கும் நாட்டில் அரசாங்கத்தை நடத்துவதற்கு? அவர்களுக்கு சரியான இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என கூறினார்.
நமது நாட்டில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் தான் ஆட்சியை நடத்துகிறார்கள் என்று மக்கள் தவறாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். நான் அரசாங்கத்தை உள்ளே இருந்து பார்த்தேன். பிரதமர் நரேந்திர மோடியுடன் 90 அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்திய அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இந்த 90 அதிகாரிகள் இந்தியாவின் பட்ஜெட்டை ஒதுக்குகிறார்கள். பிரதமர் மோடி இது ஒரு ஓபிசி அரசு என்று கூறுகிறார் . ஆனால் இந்த 90 அதிகாரிகளில் எத்தனை ஓபிசிக்கள் உள்ளனர்? என்றும் தனது குற்றசாட்டை முன்வைத்து பேசினார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.