ஒரு கோடி ரூபா மோசடி -ஜோடி ஒன்றை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்.

சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில், பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பத்தரமுல்லை, உடுமுல்லை வீதிப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டடம் மற்றும் முற்றத்தை புனரமைப்பு செய்வதற்காக 99 இலட்சத்து 43 ஆயிரத்து 108 ரூபாவை (ரூ. 9,943,108.03) அறவீடு செய்து, அதனை மேற்கொள்ளாமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய குறித்த இருவரையும் கைது செய்ய பொலிஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான விபரங்கள்
விக்னேஸ்வரன் கணேசன்
31 வயது
923394800V
இல. 39, காதினல் குரே மாவத்தை, ஹெந்தல, வத்தளை

ரேவல் நிரோஷனி ராஜரத்தினம்
36 வயது
198763501900
இல. 4/4, ஹிரிபுர குறுக்கு வீதி, ரிச்மண்ட் சிட்டி, தங்கெர, காலி

குறித்த மோசடியுடன் தொடர்புடைய இருவரும், இல. 31/7, பெபிலியான வீதி, நெதிமால, தெஹிவளை எனும் முகவரியில் உள்ள “D’ Marc Solution (PVT) LTD” எனும் பெயரில் ஒப்பந்த நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த மோசடியுடன் தொடர்புடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்காக, இவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கங்கள்:
விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி
0718137373
0112852556