கிழக்கு மாகாணத்தில் புலம்பெயர்ந்தோர் நல வள மையத்தை அமைக்க அனுமதி.


கிழக்கு மாகாணத்தில் குடிவரவு வள மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போதுமானளவு வசதிகளை வழங்குவதற்காக குடிவரவு வள மையத்தை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை குறைப்பதற்காக உரிய நேரத்தில் வழிகாட்டும் வகையில் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நியூசிலாந்து அரசாங்கம் 350,000 நியூசிலாந்து டொலர் நிதியினை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நிலையிலே, முன்மொழியப்பட்ட குடிவரவு வள மையத்தினை அமைப்பதற்கான ஒப்பந்தத்தினை கைச்சாத்திருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.