மட்டக்களப்பு மயிலத்தமடுவில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் பதற்றம்.


மட்டக்களப்பு மயிலத்தமடுவில் முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் மற்றும் அம்பிட்டிய தேரர் கூட்டிணைப்பில் அண்மையில் வைக்கப்பட்டசிலை நேற்று இரவு கடுமையான பாதுகாப்பு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து  அங்கு தற்போது அதிரடிப்படையினர் குவிக்கப்படுகின்றனர்.

தமிழ் பண்ணையாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கான மற்றுமொரு உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டதுக்கு அமைவாக குடியேறியுள்ள சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளை அகற்றும் நடவடிக்கையின் ஏற்பாடாக பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்ட்டுள்ளனர்.

மட்டக்களப்பின் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு அம்பிட்டிய தலைமையிலான குழுவினர் மயிலத்தமடு பகுதிக்கு சென்று பொலிஸாருடன் முரண்பட்டு வருகின்றனர். இதே  வேளை தமிழ் பண்ணையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் 35 ஆவது நாளாக தொடர்கிறது.