கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயார்: ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவிப்பு.
புதிய தலைமுறை அணு ஆயுதங்களின் மற்றொரு முக்கிய அங்கமான சர்மற் எனும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் வேலையை ரஷ்யா கிட்டத்தட்ட முடித்துவிட்டது என ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அங்கம் வகிக்கும் நோட்டோவில் சேரக் கூடாது என எவ்வளவோ எச்சரித்தும் உக்ரைன் கேட்காததால், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி, ரஷ்யா உக்ரைன்மீது போர்த்தொடுக்க ஆரம்பித்தது.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், ஐ.நா சபை போன்றவற்றின் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத ரஷ்யா, தன்னுடைய ராணுவ ஆயுதங்கள் மூலம், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யும் நாடுகளை மறைமுகமாக எச்சரித்தது. இந்த நிலையில், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் வேலைகளைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய புட்டின்ஹஹபல ஆயிரம் மைல்கள் தூரம் வரை செல்லக்கூடிய அணுசக்தி திறன்கொண்ட க்ரூஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகப் பரிசோதித்திருக்கிறது. அதோடு, ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த சரியான சிந்தனை உள்ளவர்கள் யாரும் இல்லை. ஒருவேளை அப்படி யாரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், எங்களிடமுள்ள பல ஏவுகணைகள் வானில் பாயும். பிறகு, ஒரு எதிரிகூட உயிர்பிழைக்க வாய்ப்பிருக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.