2024 தேர்தல் திமுக எதிர் பாஜக தான்: அண்ணாமலை திட்டவட்டம்.!


சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில், நம்மிடம் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும் என அண்ணாமலை பேசியதாக தகவல்கள் முன்னதாக வெளியாகி இருந்தன. இந்த ஆலோசனை கூட்டத்தொடர் முடிந்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

1998ஆம் ஆண்டு முதலே தேசிய ஜனநாயக கூட்டணி  இந்தியாவில் இருக்கிறது. 25 ஆண்டுகளாக என்டிஏ கூட்டணி இருக்கிறது. அதில் நிறைய கட்சிகள் வரும், போகும்.வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள்.

அதற்கு தற்போது அறிகுறிகள் தெரிகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் அந்தந்த கட்சி முன்னேற தான் பார்க்கும். பாஜகவும் அப்படி தான். 2024 தேர்தல் மிக முக்கிய தேர்தல். தமிழகத்தில் 39க்கு 39 பாஜக கூட்டணி வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார்.3வது முறையாக பிரதமர் மோடி வரவேண்டும்.  2024 தேர்தல் திமுக எதிர் பாஜக தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.