புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 36 ஆவது நினைவு தினம்.
தியாக தீபன் திலீபனின் 36 ஆவது நினைவு தினம் புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிச்சென்ற நினைவு ஊர்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமலையில் வைத்து இலங்கை காவல்துறையினரின் முன்பாக சிங்கள வன்முறையாளர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியா, கனடா உட்பட மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் இலங்கை அரசின் வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த போராட்டங்களின் போது அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகள் முன்வைப்பட்டிருந்தது. இலங்கை அரசின் காவல்துறையினரின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்டஇந்த தாக்குதல் பல செய்திகளை இந்த உலகிற்கு கூறி நிற்பதாக தெரிவிக்கப்பட்டது.போரில்இறந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கான அடிப்டை உரிமைகள் கூட தமிழ் மக்களுக்கு இல்லை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயமாக செயற்படுவதற்கான சூழ்நிலைகள் இலங்கையில் இல்லை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை அரசோ அல்லது காவல்துறையினரோ முன்வரவில்லை தமிழ் மக்கள் அகிம்சை வழியில் அமைதியாக தமது கோரிக்கைகளை சொல்வதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறையின் ஒத்துழைப்புக்களுடன் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இந்த வன்முறையை உலக நாடுகள் கண்டிக்க முன்வரவேண்டும்.