பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துக்கு முன்னால் புலம்பெயா தமிழர்கள் நீதிகோரிப் போராட்டம்.

புலம்பெயர் தமிழர்களால் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சக முன்றலில் நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தமிழர்களின் அறவழித் தியாகியான தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது திருமலையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று  லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையின் மத்தியிலும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துக்கு முன்னால் இன்று மாலை 3 மணி முதல் சில மணிநேரங்களுக்கு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.