சீமான் மாமாவின் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி.!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு சீமான், பின்னர் ஏமாற்றிவிட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். இது தொடர்பாக தன்னை சிலர் மிரட்டுவதாகவும் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அடுத்து காவல்துறையினால் தங்கள் விசாரணையை தொடங்கினர். திருவள்ளூர் மாவட்ட நீதிபதி முன்பு விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவருக்கு பதிலாக சீமான் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதனை தொடர்ந்துசீமான் ஆஜராக வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டவுடன், வரும் 18ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என சீமான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தான் சீமான் தரப்பில் இருந்து சீமானின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது .
நாம் தமிழர் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட வக்கீல் நோட்டீஸில், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகிய இருவரும் 14 நாட்களுக்குள் தங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு. அப்படி செய்யாமல் விட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் தான் நேற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றுகொண்டார் நடிகை விஜயலட்சுமி. அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், நியாயம் கிடைக்கும் என நினைத்து புகார் அளித்து, மன உளைச்சலுக்கு உள்ளாகி விட்டதாக கூறினார். மேலும், தன்னை சிலர் தவறாக வழிநடத்துவதாகவும் அதனை தான் உணர்ந்துவிட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நான் பெங்களூரு கிளம்புறேன் என்றும், நான் சீமான் சாரிடம் பேசினேன். சீமானை இங்கு ஒன்னும் பண்ண முடியாது. காசு எல்லாம் வாங்கவில்லை. நானும் ஒரு பெண் தான். என்னால் இவ்வளவு தான் செய்ய முடிஞ்சது. இந்த வழக்கை நான் தொடர்வதாக இல்லை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கு எனக்கு திருப்திகரமாக இல்லை. புகார் அளித்த தன்னை அசிங்கப்படுத்தி வந்தனர். இங்கு சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று செய்தியாளர்களிடம் நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.