காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை – சந்தேகநபர் தலைமறைவு
டி.சந்ரு செ.திவாகரன்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீப்பிலிமான பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே பலத்த வெட்டு காயங்களுக்கு இழக்கான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவத்தோடு தொடர்புடைய கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
காணி தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார்
குறித்த சம்வம் இன்று (09) இந்த வெட்டுச்சம்வம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் போது தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர் தற்போது தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
வெட்டு காயங்களுடன் உயிரிழந்துள்ள நபரின் சடலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுமென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்