தேசியக் கொள்கையின் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வும் நிகழக்கூடும்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு.
பாராளுமன்றத்தினால் தேசிய கொள்கை பற்றிய அறிக்கையை பெறுவதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொள்கையின் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வும் நிகழக்கூடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இலங்கையின் கொள்கை கட்டமைப்புக்குள் பாரிய இடைவெளி காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுதந்திர பொருளாதாரத்துக்கு தேசிய கொள்கையின்மை குறிப்பிடத்தக்க பின்னடைவாகும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தினால் தேசிய கொள்கை பற்றிய அறிக்கையை பெறுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொள்கையின் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வும் நிகழக்கூடும் என சுட்டிக்காட்டினார்.
அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய மதிப்பீட்டு கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.