ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே படகு சேவை-அமைச்சர் ஏ.வ.வேலு
பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குஜராத்தில் நடைபெற்ற 19 வது கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடலூரில் பசுமைவள துறைமுகத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், பசுமைவள துறைமுகத்தில் ஆண்டொன்றுக்கு பத்து மில்லியன் டன் சரக்குகளை கையாள வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர சுற்றுலா, கடல் நீர் விளையாட்டுகளை அனுமதித்து நீல பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.