ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் இன்று!

ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை இன்று (09) நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பனவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.