இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு  மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு  ஆகியன இணைந்து ஜப்பானின் நிதியுதவியுடன் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொழில் இழப்பு மற்றும் ஊதிய குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில், நாடு திரும்ப விரும்பும் இலங்கை புலம்பெயர்த் தொழிலாளர்கள் சமூக-பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உடனடி மற்றும் நீண்டகால தலையீடுகள் அவசியமென புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நாடு திரும்பும் இலங்கை புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.