புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் -ஜனாதிபதி
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன்; ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் தமிழ்ப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
புதிய பயங்கரவாத சட்டமூலம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் கட்சிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி, திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் குறித்த சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பயங்கரவாத சட்டமூலம் தொடர்பான வரைவுக் குழு, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ய உள்ளதாகவும் தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.