சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி சம்மதம்.
சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி சம்மதம் தொிவதற்கு துருக்கியின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு அனுப்பு ஒப்புக்கொண்டதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார். துருக்கிய அதிபர் ஏர்டோகன் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் ஆகியோருடன் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு துருக்கிய ஒப்புக்கொண்டார் என ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.
பங்கரவாதிகள் என்று கருத்தும் குர்திஷ் ஆர்வலர்களுகு்கும் சுவீடன் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டிவந்தது. இந்நிலையில் துருக்கி கடந்த ஆண்டு முதல் ஸ்வீடனின் நேட்டோ அணுகலை நிறுத்தி வைத்துள்ளது. சுவீடன் ஸ்டாக்ஹோமில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், குரான் எதிர்ப்பும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் துருக்கி சீற்றமடைந்தது.
இதனால் சுவீடன் நேட்டோவில் சேரும் விண்ணப்பத்தை துருக்கி எதிர்த்தது.இந்நிலையில் சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு துருக்கியின் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற துருக்கிய அதிபர் ஏர்டோகன் ஒப்புக்கொண்டார்.