மொட்டுக் கட்சி சவால் விடுத்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்: ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை முன்னெடுப்பதற்குச் சிக்கல் ஏற்படுத்தினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலுக்குச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் எனத் தெரியவருகின்றது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்ட தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றது. மொட்டுக் கட்சியின் இந்த நகர்வால் ஜனாதிபதி அதிருப்தி அடைந்துள்ளார்.

தான் அழைத்த கூட்டத்தை மொட்டுக் கட்சியின் மாவட்ட தலைவர்களைப் புறக்கணித்தமை தொடர்பாகவும் ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளார் என்று தெரியவருகின்றது.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துக்கு மொட்டுக் கட்சியால் சவால் விடுக்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.