இலங்கை வந்துள்ள சீன கப்பல் – தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு.
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.