குரங்கு காய்ச்சல் குறித்து தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே அறிவுறுத்தல்

குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இலங்கையில் இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது.ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குரங்கு காய்ச்சல் தொற்று பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவித்தார்

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">