மோடி செங்கோலை ஏந்தினாலும், கொடுங்கோலையே கடைபிடிக்கிறார் – சீதாராம் யெச்சூரி
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வெகு விமரிசையாக திறந்து வைக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் இந்த நிகழ்வை விமர்சித்துள்ளன.புதிய இந்தியா பிரகடனத்துடன் பலத்த பிரசாரத்துக்கிடையே புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடந்துள்ளது.
ஆனால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் இல்லாமல் புதிய இந்தியா பிரகடனம் நடந்துள்ளது. இந்தியா என்றால் நாடும், மக்களும். புதிய இந்தியா என்றால் ராஜாவும், பிரஜாவும்.
செங்கோல் முடியாட்சியின் அடையாளமாக இருந்தது, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவ மக்கள் நிராகரித்தனர். ஜனநாயகத்தில், மக்கள் தங்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதால், அத்தகைய சின்னங்களுக்கு இடமில்லை. செங்கோல் நியாயமான தலைமையின் சின்னமாகும், அதே சமயம் கொடுங்கோன்மை என்பது நியாயமற்ற மற்றும் அடக்குமுறை ஆட்சியைக் குறிக்கிறது. செங்கோல் ஏந்திய போதிலும், அவரது செயல்களின் அடிப்படையில் மோடி இன்னும் கொடுங்கோலராகவே கருதப்படுகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.