கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, இடைத் தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது.

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, இடைத் தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம், குறித்த தரகர்கள் பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
வரிசைகளில் காத்திருக்காமல், உரிய நடைமுறைகளுக்கு அப்பால், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயை சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

