ரஷ்ய வைரங்களுக்கு பிரித்தானிய அரசு தடை.
ரஷ்ய – உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்ய வைரங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகம் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றிற்கு இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.
ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். இந்த ஜி-7 உச்சிமாநாட்டில் குவாட் முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜி-7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இங்கிலாந்து அரசு நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் ரஷ்யாவில் உற்பத்தியாகும் தாமிரம் அலுமினியம் மற்றும் நிக்கல் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. இது போக புடினின் இராணுவ-தொழில்துறை வளாகத்தின் கூடுதல் 86 உறுப்பினர்களையும், ஆற்றல், உலோகங்கள் மற்றும் கப்பல் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் ஈடுபட்டுள்ள நபர்களையும் குறிவைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் போர் முயற்சியை முறியடிப்பதற்காக பொருளாதாரத்தின் மீது இதுவரை விதிக்கப்படாத வலுவான பொருளாதாரத் தடைகளை இங்கிலாந்து விதித்துள்ளதாக தெரிகிறது.