‘மோச்சா’ புயல் எச்சரிக்கை.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘மோச்சா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நேற்று (மே 11) 23.30 மணி அளவில் 12.7°N மற்றும் 88.1°Eக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இது வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவடையும் வாய்ப்பு உள்ளது. மத்திய வங்கக் கடலில் அடுத்த 06 மணி நேரத்தில் மிகக் கடுமையான சூறாவளி புயல் ஏற்படகூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன்பிறகு அது படிப்படியாக மீளவும், மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது. இந்த புயல் மே 14 மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.
கடற்படை மற்றும் பல நாள் மீன்பிடி சமூகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை (03N – 20N) மற்றும் (85E – 100E) எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் சிலாபத்திலிருந்து புத்தளம்இ மன்னார்இ காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (55-60) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் கொந்தளிப்பாக காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.