இலங்கையில் எப் எம் வானொலி சேவைகளை முடிவுக்கு கொண்டு வர திட்டம்.
இலங்கை வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.உலகிலுள்ள பல நாடுகளில் குஆ அலைவரிசைகளின் பயன்பாடு குறைவடைகின்ற நிலையிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு தாமரை கோபுரத்தின் ஊடாக வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு முதற்கட்டமாக வானொலி டிஜிட்டல் சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எப் எம் அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, வானொலி டிஜிட்டல் சேவைவிஎச் எப் அலைவரிசை ஊடாக ஒலிபரப்பப்படவுள்ளது.டிஜிட்டல் வானொலி சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான முதலீட்டை, உள்நாட்டு முதலீட்டின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பயன்படுத்தப்படும் எப் எம் வானொலிகளை நவீனமயப்படுத்த மேம்பாட்டு நவீன கட்டமைப்பொன்று பொருத்தப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எப்எம் அலைவரிசைகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை 54 வானொலிகளுக்கு எப் ம் அலைவரிசைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.