மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சுமந்திரன் தீர்மானம்.
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்த சட்டமூலம் தனிநபர் சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஒக்டோபர் 11, அன்று, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தனிநபர் முன்மொழிவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அதன்படி, குறித்த சட்டமூலத்தின் முதல் வாசிப்பு எதிர்வரும் 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை முன்னைய முறையின் அடிப்படையில் நடாத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.