சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திருப்ப எரிக் சொல்ஹெய்ம்  ஆலோசனை.

 


சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பு எளிமையானதாகவும் எளிதானதாகவும் இருக்கவேண்டும் என சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் துரிதமாக முதலீட்டாளர்களை கவரவிரும்பினால் அதிகாரத்துவம் என்பது எளிமையானதாகவும் இலகுவானதாகவும் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர்,

  முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளிநாட்டு நாணயங்களிலேயே மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திருப்புவது என்றால் இரண்டு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் முதலாவது அதிகாரத்துவ முறைமை இதனை இலகுவானதாகவும் எளிமையானதாகவும் மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.