போலி நாணயத்தாள் பயன்பாடு அதிகரிப்பு.
புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக்கூடும் என்பதால் பணத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளளனர்.
பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தில் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்தவதன் காரணமாக, கடந்த சில நாட்களாக முக்கிய நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது குறித்த பிரதேச பொலிஸாலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புத்தாண்டு வர்த்தக கண்காட்சிகளை நடத்துவதற்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் போது, திருடர்களிடம் இருந்து கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பெதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.