மோடி வழக்கு விசாரணை மேல்முறையீட்டில் ராகுல்காந்தி விளக்கம்.
13 கோடி மோடிகள் உள்ளனர். நான் அந்த அனைவரையும் குறிப்பிட்டு கூறவில்லை. என மேல்முறையீட்டில் ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். 2018 நாடாளுமன்ற தேர்தலின் போது, கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில் மோடி என்ற பெயர் குறித்து பேசியிருந்தார். நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பி சென்றதை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இது குறித்து குஜராத் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. குறிப்பிட்டமோடி பிரிவினரை ராகுல்காந்தி தாக்கி பேசியுள்ளார் என புகார் கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதல் கால அவகாசம் கொடுத்து ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல்காந்தியின் எம்பி பதவியும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இந்த சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் சூரத் மாவட்ட நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த மேல்முறையீட்டு மனுவில், மொத்தம் 13 கோடி மோடி பெயர் கொண்டவர்கள் இருப்பர்கள். அவர்கள் சார்பாக இவர்கள் வழக்கு தொடர முடியாது. மேலும் , மோடி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இனம் கிடையாது . மேலும் தான் கூறியது, நரேந்திர மோடி, நிரவ் மோடி மற்றும் லலித் மோடி ஆகியோரை தொடர்புடையது. ஒட்டுமொத்தமாக மோடி பெயர் கொண்டவர்களை அல்ல என்றும் ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.