பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு – நன்றி தெரிவித்தார் எடப்பாடி.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆவதற்கு தடை இல்லை மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மனுவும் தள்ளுபடி என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த DR.ராமதாஸ், G.K.வாசன், L.முருகன், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களுக்கும், கட்சியின் தோழமைக்கட்சிகளின் நிர்வாகிகள், அதிமுக கட்சியின் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தனது நன்றியை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.