ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்தவர் கைது.
போராட்டத்தின் போது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டுக்குத் தீ வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் கோட்டை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிட்டகோட்டையைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு திங்கட்கிழமை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்தமை, சூழ்ச்சி செய்தமை, ஒத்துழைப்பு நல்கியமை, ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.