யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான சொற்பொழிவு.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான பொது சொற்பொழிவு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றிய தலைவர் சிறீதம்ம தேரர் உள்ளிட்ட மாணவர் பிரதிநிதிகளும், யாழ்ப்பாண மாவட்டத்தின் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.