சாக்லேட் சாப்பிட வேண்டாம்-சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை.
வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படும் இனிப்பு மற்றும் சாக்லேட்டுகளின் காலாவதியான திகதிகளில் வைத்து விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான பாவனைக்கு உதவாத சாக்லேட் வகைகளை ஹலவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பாவனைக்கு உதவாத சாக்லேட் வகைகளை ஹலவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சாக்லேட்டுகள் மற்றும் இனிப்பு வகைகளின் உற்பத்தி திகதி, காலாவதியாகும் திகதி போன்றவற்றை குறிப்பிடாமல் நாடு முழுவதும் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக மனித பாவனைக்கு உதவாத சாக்லேட் வகைகளை விற்பனை செய்யும் இடங்களை இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை அண்மையில் ஆரம்பித்திருந்தனர்.
இந்தநிலையில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சாக்லைட் வகைகளை பொதுமக்கள் உற்பத்தி திகதி மற்றும் காலாவதியாகும் திகதி ஆகியவற்றுடன் அவதானமாக செயல்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.