புன்னாலைக்கட்டுவன் இரட்டைச் சகோதரிகளின் மரணத்தில் மர்மம்: திட்டமிட்ட கொலை எனக் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டு!

Meiveli Media Team


யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் தீயில் எரிந்து உயிரிழந்த உயர்தர வகுப்பு இரட்டைச் சகோதரிகளின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், உயிரிழந்த சகோதரிகளில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோது வழங்கிய மரண வாக்குமூலத்தில், தாங்களாகவே தீ மூட்டிக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த வாக்குமூலம் அச்சுறுத்தலின் காரணமாகவே வழங்கப்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே அவ்வாறு கூறியதாகவும் குடும்பத்தினர் தற்போது தெரிவிக்கின்றனர். சம்பவத்தன்று ஐவர் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், சகோதரிகளுக்குத் தீ வைக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சியொருவருக்கு உண்மையை வெளிப்படுத்தினால் ஆபத்து ஏற்படுத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் காணப்பட்ட எரிந்த அடையாளங்கள், வீட்டின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்ட கையுறைகள், மண்ணெண்ணெய் கொள்கலனில் காணப்பட்டதாகக் கூறப்படும் விரல் அடையாளங்கள் உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தொலைவிலுள்ள பற்றைக்காணியில் எரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் காணாமல் போனதாகக் கூறப்படும் சில பொருட்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தில் இரத்த மாதிரிகள் காணப்பட்டதாகவும்இ அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸாரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கிடையில்இ சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகள் தொடர்பிலும் சந்தேகங்களை வெளியிட்டுள்ள குடும்பத்தினர், விசாரணைகளின்போது பொலிஸார் அச்சுறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவேஇ தாம் முன்வைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுத்து, இரட்டைச் சகோதரிகளின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் எனக் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">