இரண்டு தமிழ் கட்சிகள் உட்பட மூன்று புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்!
Meiveli Media Team

இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(5) ஆம் பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். இதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அப ஜனதா பெரமுன, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

