பிரித்தானியாவில் பனிப்பொழிவு ஆரம்பம்! வாகன சாரதிகளுக்கு £1, 000 வரை அபராத எச்சரிக்கை!

Meiveli Media Team


பிரித்தானியாவில் குளிர்காலப் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில்,  வாகனங்களில் படிந்துள்ள பனியை முறையாக அகற்றாமல் பயணிக்கும் சாரதிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக,  முன் மற்றும் பின்புறக் கண்ணாடிகள், பக்கக் கண்ணாடிகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளில் படிந்துள்ள பனியை அகற்றாமல் வாகனத்தைச் செலுத்துவது சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பார்வையை மறைக்கும் நிலையில் வாகனம் செலுத்தினால்,  சாரதிகளுக்கு 1, 000 பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும். பனியை அகற்றுவதற்கு வாகனங்களுக்கான விசேட ஐஸ் ஸ்கிரேப்பர் அல்லது னுந-iஉநச திரவத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தின் உள்ளக னுநஅளைவநச அமைப்பைப் பயன்படுத்தி கண்ணாடிகளில் படிந்துள்ள பனியைப் படிப்படியாக அகற்ற முடியும். எனினும், பனியை விரைவாக அகற்றுவதற்காகக் கொதிக்கும் நீரை கண்ணாடிகளில் ஊற்ற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. திடீர் வெப்பநிலை மாற்றத்தால் கண்ணாடிகளில் விரிசல் ஏற்படலாம்.
அதேவேளை,  வாகனத்தின் கூரையில் படிந்துள்ள பனியையும் அகற்ற வேண்டும். இல்லையெனில் பயணத்தின்போது பனி கீழே விழுந்து ஏனைய வாகன சாரதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். பனிப்பொழிவு மற்றும் வழுக்கும் வீதிகளில் வேகத்தைக் குறைத்து, ஏனைய வாகனங்களிலிருந்து போதிய இடைவெளியைப் பேணுமாறும் பிரித்தானிய சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிர்காலப் பயணங்களின்போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது விபத்துகளைத் தவிர்க்க மிகவும் அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">