கனடாவில் வீடு வாங்க வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை 2029 வரை நீடிக்கப்படுகிறது: அரசு புதிய திட்டம்!
Meiveli Media Team

கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடுகளை வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
கனேடியக் குடிமக்கள் அல்லாதவர்களும் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவர்களும் கனடாவில் வீடுகளை வாங்குவதைக் கட்டுப்படுத்தும் சட்டம், 2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தத் தடை 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து, 2029ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரை அமுலில் வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும், இந்தத் தடையில் சில விதிவிலக்குகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
அதன்படி, ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வெளிநாட்டவர்கள் வாங்குவதற்குத் தடை தொடர்ந்தாலும்இ புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகளை வாங்குவதற்கு அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கனேடிய வம்சாவளியைக் கொண்ட குறிப்பிட்ட சில அமெரிக்கக் குடிமக்களுக்கும் இந்தத் தடையிலிருந்து விதிவிலக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கனடாவில் வீடுகளின் விலையைக் கட்டுப்படுத்துதல், உள்ளூர் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் வீடமைப்புச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டின் தாக்கத்தைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

