சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசா – ஜனாதிபதி அநுரவுக்கு குடும்பத்தினர் நன்றி!
Meiveli Media Team

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான அனோஜன் சிவராசா, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது விடுதலைக்காகத் தலையிட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை, அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர் சந்தித்து தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, அனோஜன் சிவராசாவின் விடுதலைக்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி மற்றும் நிற வேறுபாடுகளைக் கடந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதேவேளை, அனோஜன் சிவராசா தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். தமது மகன் மரண தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காக ஆரம்பம் முதலே பல்வேறு வழிகளில் உதவிய ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அனோஜனின் தாயார் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

