விசிட் விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம்:   வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கடும் எச்சரிக்கை!

Meiveli Media Team

விசிட் விசா மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை தேடும் இலங்கையர்கள் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியா, துபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி விசிட் விசாவில் அழைத்துச் செல்லப்படும் பலர் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. விசிட் விசா என்பது வேலைவாய்ப்பு விசா அல்ல என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சு, போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை நம்பி தமது பணத்தையும் எதிர்காலத்தையும் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வதால் கைது செய்யப்படுதல்,  வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை மற்றும் சம்பளம் கிடைக்காமை, பண மோசடி மற்றும் மனிதக் கடத்தலுக்கு உள்ளாகுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும்இ கடவுச்சீட்டை இழத்தல், தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுதல், நாடு கடத்தப்படுதல் மற்றும் பாரிய நிதி இழப்புகளுக்கும் முகங்கொடுக்க நேரிடலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது. எனவேஇ வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் உரிய வேலைவாய்ப்பு விசாவையும் சட்டபூர்வ அனுமதிகளையும் பெற்ற பின்னரே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் இடம்பெறும் மோசடிகளிலிருந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.